பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கு முழு ஆதரவையும் தெரிவித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

Russian President Putin - PM Modi

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் புதின்,”இத்தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது, பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில், இந்தியாவுக்கு முழு ஆதரவையும் அளிப்பதாகவும்” இந்திய  வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

மேலும், ”இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். வெற்றி தினத்தின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு அவரை அழைப்பு விடுத்துள்ளார்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்