சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள “கொட்டுக்காளி” திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும் பாராட்டுகளை தாண்டி விருதுகளை குவித்து வருகிறது. தற்பொழுது, ரஷ்யாவில் கடந்த 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற்ற 22வது ’Amur Autumn’ சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் சூரி மற்றும் நடிகை அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் GRAND PRIX AWARD விருதை வென்றது. இதனை நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன், தி […]
டெல்லி : ரஷ்யா – உக்ரைன் போருக்கு நடுவே இந்தியாவின் அகிம்சை பாதையில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் ராஜதந்திர செயல்பாடுகள், உலகரங்கில் இந்தியாயவை முன்னிலைப்படுத்துகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கி தற்போது வரையில் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும், சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்பது இரு நாட்டுக்கும் ஆதரவு என்ற சமநிலையில் உள்ளது. […]
ரஷ்யா : உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய நாட்டின் எண்ணெய்க் கிணறு கொழுந்து விட்டு எரிவதாக அந்நாட்டுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி முதல் தற்போது வரையில் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் இடைவிடாமல் நடந்து வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டும் வருகிறது. ஆனாலும், இந்த போர் முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த ஒரு தீர்மானத்தையும் இரு நாடுகளும் இது வரை எடுத்ததாக தெரியவில்லை. […]
உக்ரைன் : பிரதமர் மோடி உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவுக்கும்- உக்ரைனுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கின்றன. போலந்தில் 2 நாள் பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி, ‘ரெயில் ஃபோர்ஸ் ஒன்’ மூலம் உக்ரைன் தலைநகர் கீவ்வை நேற்று அடைந்தார். உக்ரைன் தனி நாடாக மாறிய பின்னர் அங்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் என்று பெருமையையும் இதன் மூலம் படைத்தார். அங்குப் பிரதமர் மோடி சென்ற போது உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி […]
உக்ரைன் : போலந்து நாட்டில் இருந்து உயர் பாதுகாப்பு கொண்ட ரயில் மூலம் பயணித்து இந்திய பிரதமர் மோடி உக்ரைன் நாட்டிற்கு இன்று காலை (அந்நாட்டு நேரப்படி) சென்றுள்ளார். கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் போலந்து நாட்டு பயணத்தை முடித்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று உக்ரைன் நாட்டிற்கு வந்துள்ளார். போலந்து நாட்டு பயணத்தில் அந்நாட்டு பிரதமர் டோனல்ட் டஸ்குடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி கூறுகையில், “இந்தப் பயணத்தில் அமைதியை நிலைநாட்டத் தேவையான […]
டெல்லி : ரஷ்யாவுடனான போருக்குப் பின்னர், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக உக்ரைன் செல்கிறார். ரஷியா – உக்ரைன் போர் தொடங்கியதற்குப் பின்னர், முதல் முறையாக அரசு முறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் நாட்டிற்கு செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனிடையே, 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற […]