டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் தங்கள் எதிரெதிர் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள், எல்லை பங்கீடுகளை முறித்துக்கொண்டுள்ளன. மேலும், இரு நாடுகளும் தங்கள் நாட்டு எல்லைகளில் ராணுவத்தினை பலப்படுத்தி போர் பதற்றத்தை அதிகரிக்க செய்து வருகின்றன. ஏவுகணை சோதனை, வான்வழி சோதனை, எல்லைகளில் வீரர்களை குவிப்பது. அவ்வபோது உயிர்சேதமின்றி சிறிய துப்பாக்கிச்சூடு தாக்குதல் என இந்தியா – பாகிஸ்தான் […]
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலக்கெடு குறித்து முக்கிய உத்தரவு வெளியானது. SAARC விசா உள்ளவர்கள் நேற்று முன் தினம் […]
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையான தொடர் ‘தடை’ நடவடிக்கைகள் இரு நாட்டு உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது. இரு நாடுகளும் பதிலுக்கு பதில் தடை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை நடத்தியது காஷ்மீரில் செயல்பட்டு வரும் TRF தீவிரவாத அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு என்ற குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. இதன் அடிப்படையிலேயே […]
இந்தியாவை வீழ்த்திய பிறகு பாகிஸ்தானில் எந்த கடைக்காரரும், என்னிடம் பணம் வாங்குவதில்லை என்று ரிஸ்வான் கூறியுள்ளார். 2021 டி-20 உலகக்கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்தியாவை, பாகிஸ்தான் வீழ்த்திய பிறகு பாகிஸ்தானின் எந்த கடைக்காரரும் என்னிடம் பணம் வாங்குவதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட்டர் மொஹம்மது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைகளில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது என்ற வரலாற்றை மாற்றி பாகிஸ்தான் அணி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் முன்னணி […]
பஞ்சாபில் இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 8 ஹெராயின் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூர் செக்டார் பகுதியில் உள்ள நெல் வயலில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான எட்டு பாக்கெட்டுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த பாக்கெட்டுகளில் போதை பொருள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் குச்சி வடிவில் இருந்ததாகவும், மூன்று மஞ்சள் நிறத்திலும், ஐந்து வெள்ளி நிறத்திலும் இருந்ததாகவும் எல்லை […]
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்க இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல். துஷான்பேயில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டத்தின் போது, உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சர்வதேச பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். உறுப்பு நாடுகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசஃப் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்திய தஜிகிஸ்தான் […]
75 வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இம்ரான் கானின் கருத்துக்களுக்கு இந்தியா உடனடியாக பதிலளித்துள்ளது. ஐநா பொதுச்சபையின் 75வது கூட்டம் நடைபெற்று வருகிறது.அதாவது கொரோனா காரணமாக தலைவர்கள் பங்கேற்க முடியாத நிலையில் இந்த கூட்டம் மெய்நிகர் முறையில் நடைபெறுகிறது. அதாவது உறுப்பு நாடுகளின் தலைவர்களின் உரையை முன்கூட்டியே வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும்.இந்த வீடியோ கூட்டத்தில் ஒளிப்பரப்படும் […]
பாகிஸ்தானில் இருந்து தொடங்கி ஜம்மு பகுதியில் உள்ள சம்பா வரை பயங்கரவாதிகளால் தோண்டப்பட்ட சுரங்கத்தை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லையில் நிலவும் பதற்றத்தை பயன்படுத்தி ஜம்மு காஷ்மீரில் நுழைவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அதனால் ஜம்முவில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜம்முவில் உள்ள சம்பா பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர், இந்தியா பகுதியை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தோண்டப்பட்ட சுரங்கத்தை கண்டுபிடித்தனர். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு […]
எல்லை பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது – இம்ரான் கான் உலக முழுவதும் கொரோனா சூழலில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே போட்டி நடத்த வேண்டும் என்றும் அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை இருநாட்டு கொரோனா மீட்புப்பணிக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அக்தர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், தற்போதுள்ள அரசாங்கத்துடன் இரு அணிகளும் கிரிக்கெட் விளையாடினால் […]
ராஜஸ்தானில் வெட்டுக்கிளகள் படையெடுப்பால் பயிர்கள் நாசம்..! பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானிற்கு கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துப் பயிர்களை நாசம் செய்து வருகிறது. ராஜஸ்தானில் ஜெய்சல்மீர், பார்மர், ஜோத்பூர் மற்றும் ஜலோர் மாவட்டங்களில் விவசாயிகள் சோளம், கம்பு மற்றும் கால்நடைத் தீவனப் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்த வெட்டுக்கிளிகள் 1.5 லட்சம் ஹெக்டேர் பரப்பில் இருந்த பயிற்சிகளை நாசம் செய்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப், தார்தரன் மாவட்டம் சோலா சாகிப் கிராமத்தில் 4 பயங்கரவாதிகள் காவல்துறையிடம் சிக்கினர். அப்போது அவர்களிடமிருந்து 5 ஏ.கே.47 துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், கையெறி குண்டுகள், செயற்கைகோள் தொலைபேசி, கள்ளநோட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றினர். இதன் பின் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் பாகிஸ்தானில் இருந்து ஆள்ளில்லா விமானம் மூலாமாக இந்தியாவுக்கு ஆயுதங்களை கொண்டு வருவதாகவும் கண்டறிந்தனர். இந்த தகவலை பஞ்சாப் […]