பாகிஸ்தான் “ட்ரோன்” மூலம் இந்தியாவுக்கு ஆயுத விநியோகம் ! -அமரீந்தர் சிங் புகார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப், தார்தரன் மாவட்டம் சோலா சாகிப் கிராமத்தில் 4 பயங்கரவாதிகள் காவல்துறையிடம் சிக்கினர். அப்போது அவர்களிடமிருந்து 5 ஏ.கே.47 துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், கையெறி குண்டுகள், செயற்கைகோள் தொலைபேசி, கள்ளநோட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றினர்.
இதன் பின் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் பாகிஸ்தானில் இருந்து ஆள்ளில்லா விமானம் மூலாமாக இந்தியாவுக்கு ஆயுதங்களை கொண்டு வருவதாகவும் கண்டறிந்தனர். இந்த தகவலை பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025