“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போப் போல உடையனிந்த புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, “நானே போபாக இருக்க விரும்புகிறேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில், போப்பாண்டவர் உடையில் தலை முதல் கால் வரை அணிந்திருக்கும் AI-யால் உருவாக்கப்பட்ட புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் அதிகாரப்பூர்வ பக்கமும் வெளியிட்ட இந்தப் புகைப்படம், போப் பிரான்சிஸின் மரணத்திற்குப் பிறகு சமூக ஊடகங்களில் ஒரு சிலரிடம் இருந்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. கடந்த 30-ம் தேதி, ரோமில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம், புதிய போப்பாண்டவரின் அடுத்த தேர்வு குறித்து நகைச்சுவையாகப் பேசினார்.

அதாவது, கத்தோலிக்க திருச்சபையை அடுத்ததாக யார் வழிநடத்த வேண்டும்? என்பது குறித்த தங்கள் எண்ணங்கள் என்னவென்று கேட்டதற்கு, அதிபர் டொனால்டு டிரம்ப் . “நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்,” என்று அவர் நக்கலாகக் கூறினார். மேலும், “அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்