கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை – பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
எனவே, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி இது எங்க ஊரு என்பது போல விளையாடினார்கள் என்று தான் சொல்லவேண்டும். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணி 213 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்ததாக 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களமிறங்கியது.
அடுத்ததாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாங்களும் அதிரடியாக விளையாடுவோம் என்பது போல விளையாடினார்கள். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆயுஷ் மத்ரே , ஷேக் ரஷீத் அதிரடியாக ஆரம்பித்தனர். இதில் ( ஷேக் ரஷீத் 17 ரன்) விரைவாகவே ஆட்டமிழந்த நிலையில், ஆயுஷ் முடிந்த அளவுக்கு போராடி கொண்டு விளையாடினார்.
அடுத்ததாக சாம்கரனும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய நிலையில் சென்னை தடுமாறியது. அந்த தடுமாற்றத்தை ஈடுகட்டும் விதமாக ஜடேஜா ஆயுஷ் மத்ரேவுடன் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் என்று சொல்லலாம். ஒரு பக்கம் ஜடேஜா அதிரடி காட்ட மற்றோரு பக்கம் ஆயுஷ் மத்ரே அதிரடி காட்ட இருவரும் அரை சதம் விளாசினார்கள்.
அந்த சமயம் ஆயுஷ் மத்ரே சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 94 ரன்களுக்கு அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக வந்த ப்ரெவிஸ் ரன்களுக்கு வெளியேற போட்டியே பரபரப்பாக மாறியது. தோனி, ஜடேஜா இருவரும் முடிந்த அளவுக்கு போராடி கடைசியாக 6 பந்துகளில் 15 எடுத்தால் வெற்றி என்ற நிலைமைக்கு கொண்டு வந்தார்கள்.
அந்த சமயம் தோனி அவுட் ஆகி வெளியேற போட்டி இன்னும் பரபரப்பாக இருந்தது. 3 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த சமயம் துபே களத்தில் இறங்கி 1 சிக்ஸர் விளாசினார். அது நோ பாலகவும் கிடைத்தது. அடுத்த பந்தில் சிங்கிள் எடுக்க அதற்கு அடுத்ததாக ஜடேஜா ஒரு சிங்கிள் 1 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அடிக்கமுடியவில்லை. இறுதியாக சென்னை அணி 20ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு211 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக பெங்களூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025