ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 213 ரன்களை குவித்துள்ளது.

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை – பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
எனவே, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி இது எங்க ஊரு என்பது போல விளையாடினார்கள் என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு மைதானத்தை சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் மூலம் சுற்றிக்காட்டினார்கள் என்று தான் சொல்லவேண்டும்.
ஒரு பக்கம் ஜேக்கப் பெத்தேல் சிக்ஸர் விளாச மற்றொரு முனையில் இருந்த விராட் கோலி நான் கிங் என்பது போல போட்டி போட்டி சிக்ஸர்கள் விளாசி கொண்டு இருந்தார். இருவருடைய அதிரடியை பார்த்தவுடனே இன்று பெரிய டார்கெட்டை சென்னை அணிக்கு வைக்கப்போகிறார்கள் என பெங்களூர் ரசிகர்கள் ஆரவாரத்துடன் போட்டியை பார்த்து கொண்டு இருந்தார்கள்.
அந்த சமயத்தில் தான் நாங்களும் கம்பேக் கொடுப்போம் என்பது போல, சென்னை அணி முதல் விக்கெட்டாக ஜேக்கப் பெத்தேல்லை 55 ரன்களில் தூக்கியது. அவருக்கு அடுத்ததாக விராட் கோலி கொஞ்ச நேரம் அதிரடி காட்டிவிட்டு அரை சதம் விளாசினார். அவரையும் 62 ரன்களில் தூக்கி அதிரடி ஆட்டத்திற்கு சிறிய செக் வைத்தது.
அவருக்கு அடுத்ததாக வந்த படிக்கல்லும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதன் காரணமாக கடைசி 5 ஓவர் இருக்கும் போது பெங்களூர் கொஞ்சம் தடுமாறியது என்று சொல்லலாம். இருப்பினும் களத்தில் படித்தார் மற்றும் டிம் டேவிட் இருந்த காரணத்தால் பெங்களூர் 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
அந்த சமயம் படித்தாரும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி நேரத்தில் ரொமாரியோ ஷெப்பர்ட், டேவிட் இருந்தனர். 18-வது ஓவரை பிடித்த ரொமாரியோ ஷெப்பர்ட் 6,6,4,6,4 என மொத்தம் 30 ரன்கள் விளாசினார். அதற்கு அடுத்த ஓவரில் 2 பவுண்டரி 2 சிக்ஸர் என விளாசினார். அத்துடன் ரொமாரியோ ஷெப்பர்ட் (53*) அரை சதம் விளாசி ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணி 213 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்யவுள்ளது. மேலும், சென்னை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக பத்திராணா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025