இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!
இந்தியா பாகிஸ்தான் இடையே அனைத்து வழி போக்குவரத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் அஞ்சல் சேவையும் தற்போது இரு நாடுகளுக்கு இடையே நிறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் தங்கள் எதிரெதிர் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள், எல்லை பங்கீடுகளை முறித்துக்கொண்டுள்ளன.
மேலும், இரு நாடுகளும் தங்கள் நாட்டு எல்லைகளில் ராணுவத்தினை பலப்படுத்தி போர் பதற்றத்தை அதிகரிக்க செய்து வருகின்றன. ஏவுகணை சோதனை, வான்வழி சோதனை, எல்லைகளில் வீரர்களை குவிப்பது. அவ்வபோது உயிர்சேதமின்றி சிறிய துப்பாக்கிச்சூடு தாக்குதல் என இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றமாகவே உள்ளது.
ஏற்கனவே, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்தக்கூடாது எனவும், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வழி எல்லையை பயன்படுத்த கூடாது எனவும் கூறியுள்ளன. இரு தரப்பு போக்குவரத்து சேவைகளும் தடை பட்டுள்ளன.
அதேநேரம், பாகிஸ்தான் நாட்டு கொடி இருக்கும் கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் நிறுத்தக் கூடாது என்றும், அதேபோல இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தரைவழி, வான்வழி, கடல்வழி என அனைத்து போக்குவரத்துகளும் தடைப்பட்டதை அடுத்து பாகிஸ்தானுக்கு அஞ்சல் சேவை நிறுத்தப்படுத்துவதாக இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொலைத்தொடர்புதுறை சார்பில் வெளியான அறிவிப்பில், இந்தியா பாகிஸ்தான் இடையே அஞ்சல், கார்கோ என அனைத்துவித பார்சல் சேவைகள் நிறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025