Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை அமலாக்கத்துறை சோதனை, இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்ற சூழல் உட்பட பல்வேறு செய்திகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Today Live 06042025

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது மருத்துவத்துறை சார்ந்த தொழில் அதிபர்கள் வீட்டில் நடைபெற்று வருகிறது.

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்ற சூழல் அதிகரித்துள்ள நிலையில், நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நிகழ்வு நடத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்று மத்திய உள்துறை பாதுகாப்பு செயலாளர் தலைமையில் சிவில் பாதுகாப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்