சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது மருத்துவத்துறை சார்ந்த தொழில் அதிபர்கள் வீட்டில் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்ற சூழல் அதிகரித்துள்ள நிலையில், நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நிகழ்வு நடத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. இரு நாட்டு படைகளும் தங்கள் படைகளை பலப்படுத்தும் நோக்கில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இப்படியான சூழலில் பொதுமக்களும் இந்த போர் சூழும் சூழலில் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் போர்க்கால ஒத்திகையை நாளை (மே 7) நடத்த […]