Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் முதல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வுகள் வரை பல்வேறு செய்திகளை இதில் காணலாம்.

Today Live 07052025

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடத்திய தாக்குதலில் இதுவரை 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இப்படியான சூழலில் ஏற்கனவே இன்று திட்டமிடப்பட்டு இருந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகள் நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் போர் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். மின்தடை ஒத்திகை, பதுங்கு குழிகள் பயிற்சிகள் பல்வேறு பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெற உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்