உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த காரணத்தால் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது என வெளியுறவுத்துறை செயலர் கூறினார்.

Indian Foreign Secretary Vikram Misra speech about Operation Sindoor

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து தாக்கினர். மொத்தம் 9 இடங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என தகவல் வெளியாகியது.

இந்த தாக்குதல் குறித்து இன்று காலை விளக்கம் அளிக்க உள்ளதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ” பஹல்காமில் நடந்த தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் அருகிலிருந்தும் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையிலும் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்ட விதம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்றே குடும்ப உறுப்பினர்கள் முன் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தியாவிற்கு எதிரான மேலும் தாக்குதல்கள் வரவிருப்பதாக எங்கள் உளவுத்துறை சுட்டிக்காட்டியது. இதனால், அதனை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே, இன்று அதிகாலையில், இதுபோன்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க இந்தியா பதிலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எங்கள் பதில் தாக்குதல்கள் முறையாக திட்டமிடப்பட்டன. பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை அழிப்பதில் எங்கள் ராணுவத்தினர் கவனம் செலுத்தினர்.

பஹல்காம் தாக்குதலின் குற்றவாளிகள் மற்றும் அதற்காக திட்டமிடுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியம் என்று கருதப்பட்டது. பதினைந்து நாட்கள் கடந்தும், பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பிற்கு எதிராக அந்நாட்டு அரசிடம் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை அதனால் தான் நாங்கள் தாக்குதல் நடத்தினோம். ” என மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்