டெல்லி: இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பற்றி இந்திய ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை செயலர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மட்டுமல்லாமல் இதற்கு முன் இந்தியாவுக்கு எதிராக நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவும் பல்வேறு பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது .
இதுகுறித்து இன்று ராணுவ உயர் அதிகாரி சோபியா குரோஷி (கர்னல்) கூறுகையில் , ” பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.” என்று அவர் கூறினார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கர்னல் சோபியா குரேஷி, முந்த்ரிக் மற்றும் பாகிஸ்தான் மற்றும் போஜோங் கேவில் உள்ள பிற பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்திய வீடியோக்களை வெளியிட்டார். அதில், முந்த்ரிக் மற்றும் பாகிஸ்தான் பகுதியில் உள்ள போஜோங் கேவில் உள்ள பிற பயங்கரவாத முகாம்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த வீடியோக்கள் உள்ளன.
இதனை அடுத்து கர்னல் சோபியா குரேஷி பேசுகையில், “ஆபரேஷன் சிந்தூரில் எந்த பாகிஸ்தான் இராணுவ நிலையமும் குறிவைக்கப்படவில்லை. இதுவரை பாகிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழந்ததாக எந்த தகவலும் இல்லை.” என்று கூறுகிறார்.
அதனை அடுத்து கர்னல் சோபியா குரேஷி பேசும் போது, ஆபரேஷன் சிந்தூரில் அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை காட்டும் வீடியோக்களை பகிர்ந்தார். இதில் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி பயிற்சி பெற்ற முரிட்கே உட்பட பல்வேறு பதிவுகள் இருந்தன.
பயங்கரவாத தளமான மர்காஸ் சுபன் அல்லா, பாகிஸ்தான், ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகமான பஹாவல்பூர் இந்திய ராணுவத்தால் குறிவைக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் ஒரு பகுதியாக, மர்காஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா மற்றும் மர்காஸ் அப்பாஸ், கோட்லி ஆகியவையும் இந்திய ராணுவத்தால் குறிவைக்கப்பட்ட பதிவுகள் இடம்பெற்று இருந்தன. பாகிஸ்தானுக்குள் 6 கிமீ தொலைவில் உள்ள சியால்கோட்டின் சர்ஜால் முகாம் உட்பட அழிக்கப்பட்ட வீடியோக்ககளை கர்னல் வழங்குகினார்.
மேலும் , பாகிஸ்தானுக்குள் 12-18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சியால்கோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயா முகாம் உட்பட அழிக்கப்பட்டதை காட்டும் வீடியோக்களையும் வழங்குகினார். இது ஹிஸ்புல் முஜாஹிதீனின் மிகப்பெரிய முகாம்களில் ஒன்றாகும். ஜம்மு, கதுவா பகுதியில் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கான கட்டுப்பாட்டு மையங்களில் இதுவும் ஒன்றாகும். பதான்கோட் விமானப்படை தள முகாம் மீதான தாக்குதலை இந்த முகாம் திட்டமிட்டு இயக்கியது என பல்வேறு வீடியோ பதிவுகளை கர்னல் சோபியா குரோஷி அந்த செய்தியாளர் சந்திப்பில் வெளிக்காட்டினார்.
அடுத்ததாக கமாண்டர் வியோமிகா சிங் பேசுகையில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப்படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. பொதுமக்களின் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதையும், பொதுமக்கள் உயிரிழப்பதையும் தவிர்க்க இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன” என்று கூறுகிறார்.
unknown node