Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…
இன்று வெளியான +2 பொதுத்தேர்வு முடிவுகள் முதல் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்ற சூழல் வரை பல்வேறு தகவல்களை இதில் காணலாம்.

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். தேர்வு எழுதியதில் மாணவியர்கள் 96.7% பேரும், மாணவர்களில் 93.16% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நேற்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்தூர்-ஐ அடுத்து இரு நாடுகளுக்கு மத்தியிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் மக்கள் 31 பேர் உயிரிழந்தனர் என்றும், பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பகுதியில் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் எல்லை பகுதியில் பதற்றம் கூடிக்கொண்டே செல்கிறது.