ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி! 

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் இருப்பிடங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

Operation Sindoor

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும் ஒரு நேபாள நாட்டினர் என 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது. இந்த பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு இயக்கம் என கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு அதற்கு தாக்க பதிலடி கொடுக்க வேண்டும் என இந்திய பாதுகாப்பு படைகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தன. இன்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நாடு முழுவதும் நடத்தப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இப்படியான சூழலில் தான் இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளன.

இந்த பதிலடி தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட தகவலின்படி, இன்று அதிகாலை 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பயங்கரவாதிகளின் இடங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டன என்றும், பாகிஸ்தான் ராணுவத்தையோ அல்லது பாகிஸ்தான் நாட்டு மக்கள் மீதோ இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் இன்று காலை 10 மணியளவில் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய முழு விவரங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முசாஃபராபாத், கோட்லி, குல்பூர், பிம்பேர், சகம்ரு, சியால்கோட், முரிட்கே, பாவல்பூர் என 9 இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட சில பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்