தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!
தவெக உடன் கூட்டணி வைப்பது குறித்து அடுத்த ஒரு வருடத்திற்குள் முடிவு செய்யப்படும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. அரசியல் தலைவர்களும் அதற்கான பதிலை அளித்து வருகின்றனர்.
திமுகவை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள காங்கிரஸ் விசிக, மதிமுக, கமியூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதும், அதிமுக – பாஜக கூட்டணியும் தற்போது வரை உறுதியான கூட்டணியாக பார்க்கப்படுகிறது. மற்ற பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணி பற்றி முடிவு எடுக்காமல் உள்ளது.
2026 தேர்தலில் முதல் முறையாக களத்தில் இறங்கவுள்ளா தவெக, தனித்து தான் போட்டியிடும் என்று கூறபடுகிறது . ஆனால் அதுபற்றியும் இன்னும் உறுதியான தகவல் இல்லாத நிலை உள்ளது.
இப்படியான சூழலில், இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினாரிடம் தவெக உடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த அவர், அடுத்த ஒரு வருடாத்திற்குள் தவெக உடன் கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
அரசியல் களத்தில் தவெகவின் நிலைப்பாடு என்பது ஆளும் திமுகவை அவர்கள் நேரடியாக விமர்சனம் செய்து வருகின்றனர். தேசிய அளவில் அவர்கள் பாஜகவை எதிர்த்தாலும் திமுகவை எதிர்க்கும் அளவுக்கு அவர்கள் தங்கள் எதிர்ப்பை பாஜக மீது செலுத்தவில்லை என்பதே அரசியல் நிதர்சனமாக உள்ளது. அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுடன் தவெக சற்று இணக்கமாக எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர்.