Mahindra Thar Roxx [file image]
சென்னை : இந்திய கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த 5 டோர்கள் கொண்ட ‘மஹிந்திரா தார் ராக்ஸ்’ MX1, MX3, AX3L, MX5, AX5L மற்றும் AX7L என 6 வேரியன்ட்களில் ஆகஸ்ட்-15 அன்று இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு களமிறங்கி உள்ளது. இந்த ‘தார் ராக்ஸ்ஸின்’ தொடக்கநிலை வேரியன்ட்களின் விலைகள், தற்போது மற்ற வேரியன்ட்களின் விலைகள், சிறப்பம்சம், இதர விவரங்கள் பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மஹிந்திரா தார் ராக்சின் எக்ஸ்டீரியர் அம்சங்களை சொல்ல வேண்டும் என்றால் எக்ஸ்டென்டெட் வீல்பேஸ், ரியர் டோர் ஹேண்டல்ஸ், புதிய ஸ்லாட் கிரில் மற்றும் 360 டிகிரி கேமரா என எக்ஸ்ட்டிரியர் அம்சத்தில் பெரிதளவு குறை சொல்ல முடியாத வண்ணம் அமைந்துள்ளது.
இந்த ‘மஹிந்திரா தார்’ உள்ளே நீங்கள் பலவிதமான அம்சங்களை பார்க்கலாம். அதில் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட், ஃபுல் டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வென்டிலேடெட் செய்யப்பட்ட ஃப்ரண்ட் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ரியர் ஏசி வென்ட்ஸ் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளன.
6 வேரியன்ட்களில் வெளியான இந்த தார் ராக்ஸில் வெளி தோற்றம் மற்றும் இன்டீரியர் அம்சம் ஒன்றாக இருந்தாலும் இன்ஜின் அமைப்புகள் 6 வேரியன்ட்களுக்கும் ப்ரத்யகமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.
MX1 வேரியன்ட் :
இதில் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகிய இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன் வருகிறது. இந்த வேரியன்டில் 2 இன்ஜின்களுடனும் மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், ரியர் வீல் டிரைவ் வசதியை மட்டுமே இந்த அடிப்படை வேரியன்ட் கொண்டிருக்கிறது.
MX3 வேரியன்ட் :
இதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பெட்ரோல் இன்ஜினுடன் ஆட்டோடமேடிக் கியர்பாக்ஸ் தேர்வும், டீசல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
AX3L வேரியன்ட் :
இதில் டீசல் இன்ஜின் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டீசல் இன்ஜினுடன் மேனுவலான கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.
MX5 வேரியன்ட் :
இந்த AX5 வேரியன்ட்டில் பெட்ரோல், டீசல் இன்ஜின் தேர்வுகள், ஆட்டோ மேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகள் மற்றும் 2WD, 4WD டிரைவ் தேர்வுகள் என அனைத்து விதமான காம்பினேஷன்களிலும் விற்பனையாகிறது.
AX5L வேரியன்ட் :
அதே நேரம், டீசல் இன்ஜினுடன் ஆட்டோ மேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே இந்த AX5L வேரியன்ட்டில் கொடுக்கிறார்கள். ஆனால், ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் 2WD மற்றும் 4WD ஆகிய இரண்டு டிரைவ் ஆப்ஷன்களையும் கொண்டிருக்கிறது.
AX7L வேரியன்ட் :
டீசல் மேனுவல் 2WD ட்ரிம்மானது ரூ.18.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், AX7L பெட்ரோல் ஆட்டோமேட்டிக் 2WD ட்ரிம்மானது ரூ.19.99 லட்சம் விலையிலும், AX7L டீசல் ஆட்டோமேட்டிக் 2WD ட்ரிம்மானது ரூ.20.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியாகியிருக்கிறது.
MX1 வேரியன்ட் :
MX3 வேரியன்ட் :
MX5 வேரியன்ட் :
AX3L வேரியன்ட் :
AX5L வேரியன்ட் :
AX7L வேரியன்ட் :
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…