Volvo C40 Recharge [Image source: Twitter/@CdnVolvoClub]
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான வோல்வோ, அதன் வோல்வோ சி-40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அடிக்கடி உயர்வதால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன தயாரிக்கும் நிறுவனங்கள் மின்சார வாகனங்களின் தயாரிப்பில் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில், முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான வோல்வோ(Volvo) அதன் வோல்வோ சி-40 ரீசார்ஜ் (Volvo C40 Recharge) எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
முன்னதாக, அறிமுகப்படுத்தப்பட்ட வோல்வோ XC40 எலக்ட்ரிக் காருக்கு பிறகு, வோல்வோவால் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள இரண்டாவது எலக்ட்ரிக் கார் இதுவாகும். இந்த வோல்வோ XC40 கார் ஏற்கனவே நாட்டில் விற்பனையில் உள்ள நிலையில், தற்பொழுது அறிமுகமாகவுள்ள வோல்வோ சி-40 அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வோல்வோ சி40 வடிவமைப்பு:
இந்த வோல்வோ சி40 எலக்ட்ரிக் கார் நேர்த்தியாகவும் நவீன அம்சங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. வாகன உற்பத்தியாளரின் தனித்துவமான (சிக்னேச்சர்) ஸ்டைலிங்கைக் கொண்டுள்ளது. வழக்கமாக கார்களில் பயன்படுத்தப்படும் ரேடியேட்டர் கிரில்லுக்குப் பதிலாக மூடிய பேனலுடன் முன்புறம் அமைந்துள்ளது. மேலும், இந்த கார் ஒரு மோட்டார் கொண்ட ரியர்-வீல் டிரைவ் கட்டமைப்பு மற்றும் இரண்டு மோட்டார் கொண்ட ஆல்-வீல் டிரைவ் கட்டமைப்புடன் வருகிறது.
வோல்வோ C40 பேட்டரி:
வோல்வோ சி40 எலக்ட்ரிக் கார் ஆனது 78 kWh பேட்டரியில் இருந்து தேவையான ஆற்றலைப் பெறுகிறது. இது 150kW பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இதனால் 40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 371 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும். இதில் 5 பேர் வரை தாராளமாக பயணிக்கலாம்.
வோல்வோ C40 அம்சங்கள்:
இந்த வோல்வோ சி40 எலக்ட்ரிக் காரில் உள்ள கணினியில் புதிய செயல்பாடுகளை ஒருங்கிணைக்க கூகுள் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மேலும், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் 12 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் (Harman Kardon sound system) ஆகியவை அடங்கும்.
எப்போது அறிமுகம்.?
வோல்வோ நிறுவனம் அதன் புதிய வோல்வோ சி-40 (Volvo C40) எலக்ட்ரிக் காரை ஜூன் மாதம் 14ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இத்தகைய அம்சங்கள் நிறைந்த கார் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…