gold rate today [Image Source : File Image]
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அதுபோல், கடந்த வாரம் தங்கம் விலை கடும் சரிவை கண்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், தீபாவளி முடிந்து இந்த வார தொடக்க நாளில் இருந்து இன்று வரை தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ஒரு சவரனுக்கு அதிரடியாக ரூ.520 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 உயர்ந்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, சென்னையில் (17.11.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.45,600க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,700க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.79.50க்கும், கிலோ வெள்ளி ரூ. 79,500க்கும் விற்பனையாகிறது.
பால் விலை உயர்த்தப்படவில்லை.. ஆவின் கொடுத்த விளக்கம்..!
(16.11.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,080க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,635க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…