வணிகம்

Stock Market: தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.! சென்செக்ஸ் 66,100 புள்ளிகளாக வர்த்தகம்.!

Published by
செந்தில்குமார்

முந்தைய வாரங்களில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள், இந்த வார வர்த்தக நாளில் வீழ்ச்சியுடனே வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று 66,215 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 130.17 புள்ளிகள் சரிந்து 66,100.07 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 56.95 புள்ளிகள் சரிந்து 19,685.40 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,230 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,742 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. முன்னதாக, 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது.

அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் பங்குச்சந்தையானது வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டில், மொத்தம் 15 பங்குச் சந்தை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் இன்னும் 6 விடுமுறைகள் மீதம் உள்ளன. அதன்படி, அடுத்த பங்குச் சந்தை விடுமுறை அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தி ஜெயந்தி அன்று வருகிறது. அதேபோல, அக்டோபர் 24ம் தேதி தசரா, நவம்பர் 14ம் தேதி தீபாவளி, நவம்பர் 27ம் தேதி குருநானக் ஜெயந்தி மற்றும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் ஆகிய ஐந்து பங்குச் சந்தை விடுமுறைகள் உள்ளன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

22 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

1 hour ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

2 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

3 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago