Sensex Rise [Image Source : gnsnews]
இந்தியப் பங்குச்சந்தை குறியீடான என்எஸ்இ (NSE) நிஃப்டி அளவு உயர்ந்து சாதனை படைத்துள்ளது. அதன்படி, இதுவரை 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்துள்ளது. நிஃப்டி குறியீடு 20 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வாரத்தின் முதல் நாளான இன்று 66,807 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 528.17 புள்ளிகள் உயர்ந்து 67,127.08 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 176.40 புள்ளிகள் உயர்ந்து 19,996.35 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,598 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,819 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதல்களால் சென்செக்ஸ் குறியீட்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, மாருதி சுஸுகி இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. லார்சன் & டூப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
மேலும், நிஃப்டி குறியீட்டில் அதானி போர்ட்ஸ் & சிறப்பு பொருளாதார மண்டலம், அதானி எண்டர்பிரைசஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. கோல் இந்தியா, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…