5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று விளையாடிய கேப்டன் கில் 269 ரன்களை சேர்த்தார். அவருக்கு துணையாக ஜடேஜா(89), வாஷிங்டன் சுந்தர்(42) சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். வலுவான ஸ்கோரை முதல் இன்னிங்சில் இந்திய அணி எடுத்துள்ளது.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து இங்கிலாந்து வீரர்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். ஆகாஷ் தீப் 3-வது ஓவரில், கடந்த டெஸ்டில் சதம் அடித்த டக்கெட்(0), ஓல்லி போப்பை (0) காலி செய்தார். பின்னர் ஜாக் கிராவ்லி – ஜோ ரூட் அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால் 7-வது ஓவரில் கிராவ்லியின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார்.
அதன்படி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் 587 ரன்களை குவித்த இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இதனையடுத்து இன்று 3 நாள் ஆட்டம் தொடங்கிய போது, சிராஜின் வேகத்தில் ஜோ ரூட்(22), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (0) அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால் 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறி வருகிறது.
இருப்பினும், 84 ரன்கள் எடுத்த நிலையில் ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணிக்கு ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோர் எனர்ஜி பூஸ்ட்டை அளித்துள்ளனர். இருவருக்கும் இடையே 154 பந்துகளில் 165 ரன்கள் கூட்டணி அமைந்தது. ஸ்மித் 80 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார்.
முன்னதாக, அவர் 43 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். 82 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 102 ரன்கள் எடுத்து க்ரீஸில் நிற்கிறார். அவருக்கு ஆதரவாக ஹாரி புரூக்கும் இருக்கிறார், அவர் 127 பந்துகளில் அரை சதத்தை முடித்து கொண்டு 91 ரன்கள் எடுத்து சதத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். தற்போது, அணி இந்தியாவை விட 338 ரன்கள் பின்தங்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025