FINAL TRADE [Image Source : PTI]
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து சரிவுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை (Stock Market) குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, நவம்பர் 1ம் தேதியான (புதன்கிழமை) இன்று தொடர்ந்து இரண்டாவது அமர்வாகச் சரிவைச் சந்தித்தது. அதன்படி, மூன்றாவது வர்த்தக நாளான இன்று காலை மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 63,829 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கியது.
இது சில நிமிடங்களிலேயே 145.55 புள்ளிகள் சரிந்து 63,729.38 புள்ளிகளாக வர்த்தகமாகமானது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 22.50 புள்ளிகள் சரிந்து 19,057.10 புள்ளிகளாக வர்த்தகமாகமானது. வங்கி, நிதி மற்றும் உலோகப் பங்குகளின் பலவீனம் காரணமாக, தடையற்ற வெளிநாட்டு நிதி வெளியேற்றம் காரணமாக பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு மத்தியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போரும் பங்குச்சந்தை சரிவிற்கு காரணமாக உள்ளது. தற்போது வர்த்தக நாள் முடிந்துள்ள நிலையில், சென்செக்ஸ் 283.60 புள்ளிகள் சரிந்து 63,591.33 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. நிஃப்டி 90.45 புள்ளிகள் சரிந்து 18,989.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 237.72 புள்ளிகள் அல்லது 0.37 சதவீதம் சரிந்து 63,874.93 ஆக இருந்தது. நிஃப்டி 61.30 புள்ளிகள் அல்லது 0.32 சதவீதம் சரிந்து 19,079.60 ஆக இருந்தது. உலகளாவிய எண்ணெய் பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.0100 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 87.42 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 13.00 அல்லது 0.19% சரிந்து ரூ.6,769 ஆக விற்பனையாகி வருகிறது. சென்செக்ஸ் நிறுவனங்களில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன
இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக. சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…