Sensex Rise [Image source : Moneycontrol]
இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. அதன்படி, கடந்த செப்டம்பர் 17ம் தேதி மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 231.90 புள்ளிகள் வரை சரிந்தது.
அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை இந்த பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளன. இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வாரத்தின் ஐந்தாம் நாளான இன்று 65,867 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 198.24 புள்ளிகள் உயர்ந்து 65,829.81 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, என்எஸ்இ நிஃப்டி 61.65 புள்ளிகள் உயர்ந்து 19,607.40 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,631 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,545 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. இதற்கு முன்னால் 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…