சென்னை : சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் ஆசையாக நாய் மற்றும் பூனைகள் போன்ற விலங்குகளை வளர்த்து வருவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார்கள். எனவே, திடீரென அதுகளுக்கு இத்வதஹு உடல்நல குறைவு ஏற்பட்டுவிட்டது என்றால் கூட உடனடியாக சோகத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். அப்படி தான் நடிகை த்ரிஷா 12 வருடங்களாக ஆசை ஆசையாக வளர்த்து வந்த Zorro என்ற நாய் குட்டி உயிரிழந்த காரணத்தால் மிகுந்த சோகத்தில் உள்ளார். தன்னுடைய நாய்க்குட்டி உயிரிழந்த சோகமான தகவலை தனது ரசிகர்களுடன் […]
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி , ‘அலங்கு’ எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆக உள்ளது. உறுமீன், பயணிகள் கவனிக்கவும் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த எஸ்.பி.சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். குணாநிதி எனும் புதுமுக நடிகர் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் நாய்கள் மற்றும் மனிதர்கள் […]
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆரவாரப்படுத்திய நிலையில், இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு படம் டைட்டில் டீசர் வெளியானது. ஆம், சூர்யா நடிக்கும் 44வது படத்திற்கு “ரெட்ரோ” என பெயரிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, நடிகர்கள் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது படத்தில் டைட்டில் […]
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் ஆகியோர் கடந்த டிசம்பர் 22ம் தேதி உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவரது திருமணம்மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து – வெங்கட தட்சாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் குமாரும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அட […]
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு மறுபெயரான சம்பவகாரார் இயக்குநர் ஷங்கர். இதுவரை இவர் இயக்கிய படங்களின் பாடல்கள் இன்று வரை பலருடைய பேவரைட்டாக இருந்து வருகிறது. பாடல்கள் மட்டுமில்லை..படங்களும் கூட தான். ஆனால், யானைக்கும் அடி சறுக்கும் என்கிற வகையில், இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. அந்த விமர்சனங்களுக்கு […]
அமெரிக்கா: ஹாலிவுட் திரையுலகில் ‘ஓப்பன்ஹெய்மர்’ உள்பட பல ஹாலிவுட் படங்களை இயக்கிய இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், அடுத்ததாக ஹோமரின் காவியக் கதையான “தி ஒடிஸி”-யை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிரேக்க புராணத்தை தழுவி எடுக்கப்படும் இப்படம் 2026 ஜூலை 17ல் உலகம் முழுவதும் வெளியாகும் எனவும் ’தி ஒடிஸி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமரின் புராணக் கதை IMAX திரைகளுக்கு வருவது இதுவே முதல் முறை. ஆம், இத்திரைப்படம் “புத்தம் புதிய IMAX திரைப்பட […]
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்பொழுது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் (ரேவதி) உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிச,4 அன்று தொடங்கிய இந்த விவகாரம், ஓயாமல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆம், கூட்ட நெரிசல் சிக்கி பெண்ணின் மரணத்திற்கு காரணமானதாக கூறி, அல்லு அர்ஜுன் […]
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. நேற்றைய தினம் ரூ.57,120க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.57,200க்கு விற்கப்படுகிறது. மேலும், நேற்று ரூ.7,140ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.10 உயர்ந்து ரூ.7,150ஆக உள்ளது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,735-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் […]
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி ‘புஷ்பா 2’ சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் உயிரிழந்தது தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச.24) காலை 11 மணிக்கு சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, ஹைதராபாத் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. அல்லு அர்ஜுன் ஆஜராகவில்லை எனில் இந்த வழக்கு சிக்கலாகக் கூடும். இதனால், அவர் இன்று காலை நேரில் ஆஜராகுவார் என […]
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு அழுத்தமான அரசியல் வசனங்களை வைத்து தரமான படத்தை கொடுத்திருக்கிறார். எனவே, மக்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். மக்களை போல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் படத்தை பாராட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில், வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், வடசென்னை, ஆடுகளம், பொல்லாதவன் ஆகிய படங்களில் நடித்த தனுஷ் தற்போது படத்தினை பார்த்துவிட்டு தன்னுடைய […]
சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை போல பெரிய ஹிட் படங்களை கொடுக்காமல் இருந்த விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு இரண்டு தரமான படைப்புகளாக மகாராஜா, விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களும் அமைந்துள்ளது. ஏற்கனவே, மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பேராதரவு பெற்று உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு தரமான […]
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன் கைது, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் காட்டமான பேச்சு, இப்போது அல்லு அர்ஜுனின் வீடு தாக்குதல் என விவகாரம் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது, நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. BREAKING: Bail GRANTED to Allu Arjun house???? […]
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை ‘சன்னி லியோன்’ பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம் பெற்றது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் ‘டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு’ நிதி உதவித்திட்டம் நடைமுறையில் உள்ளது. இதைப் போல, சத்தீஸ்கர் மாநில அரசு அம்மாநில கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு உதவி தொகையாக ‘மஹ்தாரி வந்தனா யோஜனா’ (Mahtari Vandana Yojana) என்கிற திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் தான், அந்த நபர் […]
சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. சமீபத்தில் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பலியான சம்பவம் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கனா சட்டப்பேரவையில், “புஷ்பா 2 படம் முதல் ஷோவிற்கு அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வரக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. அதையும் மீறி அவர் முதல் ஷோவிற்கு சென்றார், மக்கள் கூட்டம் […]
தெலங்காணா: ‘புஷ்பா 2′ திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டார். ஆனால், ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் இருந்து மறுநாள் காலையிலேயே விடுதலை அடைந்து வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில், ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, நேற்றைய தினம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் காட்டமாக பேசினார். […]
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, ‘விடுதலை’ முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட ‘விடுதலை-2’ நேற்று முன் தினம் (டிச,20) வெளியானது. முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று முதலே கலவையான விமர்சனத்தை பெற்று இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு […]
ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, ‘போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றதே காரணம்’ என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். திரை பிரபலங்கள் மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கக் கூடாது என கேட்டுக் கொள்வதாகவும், தான் முதல்வராக இருக்கும் வரை, இனி மாநிலத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தெலங்கானா முதல்வரின் கருத்துக்கள் தன்னை காயப்படுத்தியதாக அல்லு அர்ஜுன் வருந்தியுள்ளார். […]
தெலங்கானா : ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் காட்டமாக பேசியிருக்கிறார். ‘திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜூன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம்’ என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பெண் உயிரிழந்தது தெரிந்தும் படத்தை முழுவதுமாக பார்த்த பிறகே அல்லு அர்ஜூன் வெளியே வந்ததாக கூறியுள்ளார். புஷ்பா 2 வெளியீட்டின்போது படம் பார்க்க வந்த […]
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த “விடுதலை 2” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெற்றிமாறனின் இயக்கம், திரைக்கதை நேர்த்தியாக இருப்பதாகவும், விஜய் சேதுபதியின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும் பாராட்டுகிறார்கள். குறிப்பாக, இளையராஜாவின் பின்னணி இசை திரைக்கதைக்கு மிகவும் வலுசேர்ப்பதாக குறிப்பிடுகிறார்கள். முதல் பாகத்தில் சூரியைச் சுற்றி கதை நகர்ந்த நிலையில், இதன் 2-ம் பாகமானது ‘பெருமாள் வாத்தியார்’ என்ற விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை சுற்றி இருக்கும் எனத் தெரிகிறது. […]
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்…வந்துச்சே வசூல் மழை தான்… என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது நிற்காமல் அமோகமாக சென்று கொண்டு இருக்கிறது. படத்திற்காக செலவு செய்த தொகை என்றால் பட்ஜெட்டுடன் சேர்த்து 500 கோடிக்குள் இருக்கும். ஆனால், படம் வெளியான 14 நாட்களிலே உலகம் முழுவதும் 1508 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டும் இருக்கிறது. இருப்பினும் படத்தினை திரையரங்குகளுக்கு சென்று […]