சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தான் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து மைதானத்திற்குள் செல்ல ஆசைப்படுவதாக கூறியுள்ளார். 15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி தொடங்கும் முன்னர் […]
ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் ஓவரிலே அதிரடி பேட்ஸ்மேன் ருதுராஜ் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் உமேஷ் யாதவ். ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசி வருகிறது. அதன்படி முதல் ஓவரை உமேஷ் யாதவ் […]
ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் முறையாக இரு அணிகளும் புதிய கேப்டன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, சென்னை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டன்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மும்பை வான்கனடே மைதானத்தில் […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அடுத்த ஆண்டு முதல் 6 அணிகள் கொண்ட மகளிர் ஐபிஎல் போட்டியை நடத்த முன்மொழிவு. மும்பையில் நேற்று நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் ஆளும் கவுன்சில் (ஜிசி) கூட்டத்தில், 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கான உரிமையை அடிப்படையாகக் கொண்ட வருடாந்திர டி20 போட்டியைத் தொடங்க (womensipl2023) முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நேரில் சந்தித்த GC உறுப்பினர்கள், அணிகளை […]
ரிஷப் பண்ட் எதிர்காலத்தில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை என ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் எதிர்காலத்தில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்தார். ஐபிஎல் போன்ற அழுத்தம் […]
ஐபிஎல் டி20 2008 ஆம் ஆண்டு உதயமானதிலிருந்து இன்று வரை எந்த ஒரு சிறு சலிப்பும் இல்லாமல் உற்சாக நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் 8 அணிகளுடன் தொடங்கிய இப்போட்டி இந்த முறை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரண்டு புது அணிகள் களமிறங்குகிறது. அணிகள் விவரம்: இவ்வாறு அணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் கோப்பையை வென்ற அணி மற்றும் அதிக முறை இறுதிப்போட்டிக்கு சென்ற அணி என்ற அடிப்படையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக […]
பாகிஸ்தான் அணியை 115 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை 1-0 என கைப்பற்றியது. பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தன. இதைத்தொடர்ந்து, லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா வெற்றி: 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. மூன்றாவது […]
நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே முதல் போட்டி நடைபெறுகிறது. நாளை ஐபிஎல் 2022 (ஐபிஎல் 2022) இன் தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரவு 7:30 மணிக்கு மோதுகிறது. இரு அணிகளுமே கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகள். இம்முறை கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களம் இறங்கும், அதே சமயம் சென்னை அணி ரவீந்திர […]
ஐபிஎல் 2022 க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி ஒப்படைத்துள்ளார். ஐபிஎல்:சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் எம்எஸ்.தோனி க்கு பதிலாக புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடங்கியது முதல் கேப்டனாக இருந்து வரும் தோனி தனது கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒப்படைத்துள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது. எம்எஸ் தோனி தனக்கான தனி […]
மொயீன் அலிக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை என்பதால் ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 இன் முதல் போட்டியில் நான்கு முறை சாம்பியனான சென்னை மற்றும் கடந்த ஆண்டு ரன்னர்-அப் அணியான கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு வரும் சனிக்கிழமை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொயீன் அலி இல்லாமல் விளையாட உள்ளது. இதை சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் […]
டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தென்னாபிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் தொடங்கிய ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் முடிந்தது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், இன்று கடைசி மற்றும் 3 வது போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் […]
நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா அவதாரம். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக உருவெடுக்கவுள்ளார். மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை இந்தமுறை சென்னை உட்பட எந்த அணியும் ஐபிஎல் போட்டியில் விளையாட ஏலம் எடுக்கவில்லை. ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து அனைத்து சீசன்களிலும் பங்கேற்று வந்த ரெய்னா, முதல் முறையாக தொடரில் பங்கேற்காத சூழல் ஏற்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்திருந்த ரசிகர்களுக்கு தற்போது உற்சாக செய்தி […]
ஹாமில்டனில் நடந்த போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. இன்றை போட்டியில் முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்த மிதாலி-ராஜ் ஹாமில்டனில் பங்களாதேஷுக்கு எதிராக யாஸ்திகா பாட்டியா மற்றும் ஷபாலி வர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 229 ரன்கள் எடுத்தது. பின்னர் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி […]
ஐபிஎல் 2022, 15-வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி,இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. 70 லீக் போட்டிகள்: அதன்படி,மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. அந்த வகையில்,மும்பை – வான்கடே மைதானம் 20 போட்டிகள், மும்பை – […]
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) கூட்டத்தில் 2024-ம் ஆண்டு வரை ஏசிசி தலைவராக ஜெய் ஷா நீடிப்பார் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் பதவிக்காலம் 2024 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று ஏசிசி உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ட்வீட் செய்து கூறப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் ஐந்து […]
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி மற்றொரு தோல்வியை சந்தித்துள்ளது. ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தியது. முதலில் இறங்கிய இந்தியா: டாஸ் இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. நான்காவது ஓவரில் ஸ்மிருதி மந்தனா (10) பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து பேட்டிங்கை வலுப்படுத்த ஆல்ரவுண்டர் தீப்தி சர்மாவுக்கு பதிலாக களமிறங்கிய […]
கடந்த 2011-ஆம் ஆடுனு மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தனது மனைவி நடாஷா வர மறுத்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கம்பீர் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், அது என்ன அவ்வளவு முக்கியமா? இது கிரிக்கெட்டின் மற்றொரு விளையாட்டு போட்டி அவ்வளவுதானே என்று இறுதி போட்டியா காண அழைத்த போது தனது மனைவி நடாஷா இவ்வாறு கூறியதாக தெரிவித்தார். இப்பொது […]
ஜெர்சி எண்ணாக 7 நம்பரை தேர்ந்தெடுத்ததில் மூடநம்பிக்கை இல்லை என முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தொடங்கி, ஐபிஎல்-லில் சென்னை அணிக்காக விளையாடுவது வரை டோனியின் ஜெர்சி எண் ஏழாக உள்ளது. இந்த 7-ஆம் நம்பர் தோனிக்கு ரசியானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் ஏற்பாடு செய்த ரசிகர்களுடனான மெய்நிகர் உரையாடலில் கலந்துகொண்டார் தோனி. அப்போது, ரசிகர்களுடனான உரையாடலின்போது தான் ஏழாவது மாதம் (ஜூலை) 7-ஆம் தேதி பிறந்ததால், […]
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. 2-வது சுற்றில் தோல்வியடைந்த இந்திய வீரர்கள்: 2-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை டகாஹஷியிடம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோற்று வெளியேறினார். மற்றோரு 2-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியிடம் இந்திய வீராங்கனை சாய்னா தோல்வியடைந்தார். அதேபோல 2-வது சுற்றில் இந்தோனோஷிய வீரர் அந்தோணி சினிசுகாவிடம் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். இந்திய வீரர் லக்ஷயா சென் வெற்றி: இந்திய […]
மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்து, இந்தியா மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் இறங்கிய இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சொதப்பிய இந்தியா: அணியின் தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா (35 ரன்கள்) குவித்தார். இரண்டாவது சிறந்த தனிநபர் ஸ்கோராக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ் ரன் பார்க்கப்படுகிறது. இவர் 33 ரன்கள் எடுத்தார். இதைத் தவிர வேறு […]