கடலூரில் நாளை வழக்கம் போல் கடைகள் செயல்படும்- மாவட்ட ஆட்சியர்
கடலூரில் நாளை வழக்கம் போல் கடைகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி என்எல்சி நிர்வாகம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல் வளையமாதேவி கீழ் வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. என்எல்சிக்கு எதிராக கண்டனம் அதன்படி, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கண்டன்னகளை தெரிவித்து வரும் நிலையில், என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். […]