ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்து வந்தவரும், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருமாக இருந்த அலெக்ஸி நவல்னி, தான் தண்டனை அனுபவித்து வந்த ஆர்டிக் பகுதி சிறைச்சாலையில் நேற்று உயிரிழந்தனர். அவர் உயிரிழப்பதற்கு முன்னர் அவர் சிறை அனுபவங்கள் பற்றி உச்சநீதிமன்றத்தில் கூறிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. சிறை மாற்றம் : புடினை கடுமையாக விமர்சித்தவர்களில் முக்கியமானவராக அலெக்ஸி நவல்னி பார்க்கப்படுகிறார். இவர் தீவிரவாத நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டில் 19 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளார். […]
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு 355 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபரும், வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளவருமான டொனால்ட் டிரம்ப், தனது நிறுவனம் மூலம் ரியல் எஸ்டேட், கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். உடன், அவரது மகன்கள் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோர்களும் இந்த நிறுவனத்தில் முக்கிய […]
இங்கிலாந்தின் பார்ன்ஸ்யில் உள்ள ஒரு நபர், தனிப்பட்ட கருவுறுதல் பிரச்சினைகள் மற்றும் செயற்கை கருத்தரிப்புக்கு பண நெருக்கடி காரணமாக தனது துணையை கருவுறச் செய்வதற்காக தனது தந்தையின் விந்தணுவுடன் தனது விந்தணுவை கலந்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் கவுன்சில் அமைப்பு அறிந்ததும் அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பதனை கண்டறிய தூண்டியது. இந்நிலையில், அந்த நபர் தான் தந்தையா? என்பதை அறிய அவரது டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்தற்கு உத்தரவிட வேண்டும் […]
இந்தியா மற்றும் நேபாளத்தின் மத்திய வங்கிகள், இரு நாடுகளின் விரைவான கட்டண முறைகளை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் நேபாள ராஸ்ட்ரா வங்கி (NRB) இணைந்து, UPI-NPI இணைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒருங்கிணைப்பானது இந்தியா மற்றும் நேபாளம் இடையே எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு இடையேயான இணைப்புக்கான ஒப்பந்தம் தொடர்பான முழுமையான விதிமுறைகள் தொடர்பில் கையெழுத்தான பிறகு, UPI […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் பொதுச் செயலாளர் உமர் அயூப்பை பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று இதற்கான முடிவுகளும் வெளியான நிலையில், இன்னும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காமல் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்ததால், கூட்டணி ஆட்சி அமையும் என தெரியவருகிறது. இந்த தேர்தலில் நவாஸ் […]
ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களுக்கு நேற்றைய நாள் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. 60 வயதான அந்தோனி அல்பானீஸ் தனது காதலியான ஹெய்டனுடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த தகவலை அவரே சமூக வலைத்தளம் மூலம் அனைவருக்கும் தெரிவித்தார். பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் “தனது வருங்கால மனைவியுடன் கைகோர்த்து செல்லும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஒரு நிமிடம் 26 வினாடிகள் கொண்ட வீடியோவில், பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது காதலியுடன் நடந்து […]
கடந்த ஒருவாரமாக காதலர்களின் வாரமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து கொண்டாடப்பட்டது. அதிலும் நேற்றைய தினமான பிப்ரவரி 14-ல் உலக காதலர் தினமாக கொண்டாடபட்டது. ஆனால், பிப்ரவரி 15ம் தேதியான (இன்று) முதல் வரும் பிப்ரவரி 21 வரை ‘காதலர் எதிர்ப்பு’ வாரமாக கொண்டாடப்படுகிறது. அந்த இடைப்பட்ட நாட்களில் அந்தந்த நாளுக்கான பெயர்களை பற்றியும் அன்று என்னென்ன செய்வார்கள் எனபது பற்றியும் பார்ப்போம். ஸ்லாப் டே (Slap Day) : பிப்ரவரி 15ம் […]
அமெரிக்கா மிசோரியின் கன்சாஸ் நகரில் பேஸ் பால் உள்ளூர் விளையாட்டு தொடரில் வெற்றிபெற்ற கன்சாஸ் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெற்றி பேரணியை நேற்று புதன் கிழமை நடத்தினர். அந்த பேரணியின் போது திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பேரணியில் திடீரென நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இந்த துப்பாக்கி சூட்டில் டிஜேயாக வேலை செய்து வந்த லிசா […]
பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினாவுடன்பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு 7-வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த 8 மாதங்களில் 3-வது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் […]
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று உலக முழுவதும் உள்ள காதல் ஜோடிகள் தங்களது காதலர் தினத்தை பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தன்று தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டை உள்ளிட்டவற்றை பரிமாறிக்கொண்டு காதல் ஜோடிகள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு செல்வார்கள். இந்த சூழலில் காதலர் தினம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம். காதலர் தினம் குறித்து பல கதைகள் […]
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமையவுள்ள நிலையில், பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் பரிந்துரை செய்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (சுயேட்சை), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் […]
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உடன் இணைந்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக யுபிஐ ரூபே (Rupay) கார்டு சேவையை அபுதாபியில் தொடங்கி வைத்தார். ரூபே சேவையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஷேக் முகமது பின் சயீத் தனது பெயர் பொறிக்கப்பட்ட அட்டையை ஸ்வைப் செய்தார். இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இந்தியர்களும் சரி, இந்தியாவுக்கு வரும் எமிரிகளும் சரி […]
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து ஐந்து நாட்களுக்குப் பிறகும், நாட்டில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது மற்றும் பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் என்பது இன்னும் பெரிய குழப்பமாகவே உள்ளது. இப்படியான சூழலில் நான்காவது முறையாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- (நவாஸ்) கட்சியின் நிறுவனர் நவாஸ் ஷெரீப் பிரதமராவார் என அவரின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, “நான்காவது முறையாக நவாஸ் […]
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. இருப்பினும் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே 4-மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் இதுவரை சுமார் 26,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், அதே நேரத்தில் பலர் மருத்துவமனைகளில் உயிருக்கும் போராடி வருகின்றனர். இந்த உயிரிழப்புகளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஹமாஸுக்கு எதிரான தரைவழித் […]
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 60 தொகுதி பெண்களுக்காவும், 10 தொகுதி சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டது. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கு பொதுவான தேர்தல் நடைபெற்றது. பாகிஸ்தானில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. இம்ரான் கானுக்கு ஜாமீன்.! பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி.? நவாஸ் செரிப் திட்டம் என்ன.? இப்படியான சூழலில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்றவர்கள் […]
பாகிஸ்தானில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 60 தொகுதி பெண்களுக்காவும், 10 தொகுதி சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்படும். மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கு பொதுவான தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. நவாஸ் ஷெரீப் அறிவுத்திறன் குறைந்த தலைவர்.! சிறையில் இருந்து இம்ரான் கான் பேச்சு.! முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் இருப்பதால் அவரது தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி சின்னம் பேட் […]
பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்கள், பரபரப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது . மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 60 தொகுதி பெண்களுக்காவும், 10 தொகுதி சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்படும். மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கு பொதுவான தேர்தல் நடைபெற்றது. இதில் நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்ரான் கான் பல்வேறு வழக்குக்களில் தண்டனை பெற்று சிறையில் இருப்பதால் அவரின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி சின்னம் பேட் […]
பாகிஸ்தான் நாடளுமன்ற தேர்தலில் தனது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அதே நேரம் இம்ரான் கானுடன் தொடர்புடைய சுயேட்சைகளின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். பாகிஸ்தானின் தேசிய அவை (நாடாளுமன்றம்) மற்றும் மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி மற்றும் அதன் ஆதரவு பெற்ற சுயேட்சைகள், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் […]
இன்னும் சில மாதங்களில் தன்னுடைய தொலைபேசி எண்ணைத் துண்டிக்க இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் அண்மையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். எக்ஸ் தளத்தின் உரிமையாளராகவும் எலான் மஸ்க் உள்ளார். இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்னும் சில மாதங்களில் என்னுடைய தொலைபேசி எண்ணைத் துண்டித்துவிட்டு, எக்ஸ் தளத்தை குறுஞ்செய்தி மற்றும் […]