அபுதாபியில் ரூபே சேவையை தொடங்கி வைத்த மோடி – ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உடன் இணைந்து டிஜிட்டல்

Featured image

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உடன் இணைந்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக யுபிஐ ரூபே (Rupay) கார்டு சேவையை அபுதாபியில் தொடங்கி வைத்தார். ரூபே சேவையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஷேக் முகமது பின் சயீத் தனது பெயர் பொறிக்கப்பட்ட அட்டையை ஸ்வைப் செய்தார்.

இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இந்தியர்களும் சரி, இந்தியாவுக்கு வரும் எமிரிகளும் சரி யுபிஐ மற்றும் ரூபே கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்த முடியும். இதே போல இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், அங்கிருந்து இந்தியாவுக்கும் பணம் அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்பார்: ஷெபாஸ் ஷெரீப் உறுதி

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். இன்றைய நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நாளை துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை அவர் திறந்து வைக்கவுள்ளார்.