A. R. Rahman [file image]
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் பல படங்களில் இசையமைத்து 2 ஆஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றார்.
இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாத ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு பல ஹிட் பாடல்களை மக்களுக்கு கொடுத்து இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளுக்கு சென்றும் கலக்கி இருக்கிறார்.
இசைஞானி என்ற கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் – இசையமைப்பாளர் இளையராஜா பேச்சு!
இவர் இசையமைத்த பல பாடல்களும் பலருடைய பேவரைட்டாக இருக்கிறது. ஆனால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே பிடித்த பாடல் என்றால் எது தெரியுமா? இதனை பேட்டி ஒன்றிலே ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது பற்றி ஆரம்ப காலத்தில் அளித்த பேட்டியில் “ஒரு பொண்ணு ஒரு பையன் படத்தில் இடம்பெற்று இருந்த மலர்களே மலர்களே பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
இதனை நாள் பல இடங்களில் கூறியிருக்கிறேன். அதற்கு காரணம் என்னவென்றால், அந்த பாடலில் வரும் ராகங்கள் கேட்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் நான் பாடல்களை கேட்கவேண்டும் என்றால் அந்த பாடலை தான் அடிக்கடி கேட்பேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…