லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!
காலையிலையே அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி 4 வழி சாலையில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர விபத்தில், கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்களும், ஒரு கிளினரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆனால், அவர்களின் அடையாளங்கள் அல்லது மேலும் தனிப்பட்ட விவரங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த வாகனங்கள் இரண்டும் கனரக வாகனங்கள் என்பதால், மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது.
இந்நிலையில், அருப்புக்கோட்டை காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், விபத்தின் காரணத்தைக் கண்டறிய விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025