Allu Arjun - Pushpa 2 [file image]
நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
புஷ்பா 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு பெண் கெட்அப்பில் இடம்பெறும் முக்கியமான பாடல் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இதனைதொடர்ந்து ஒரு பெரிய சண்டைக் காட்சியும் படமாக்க உள்ளனர்.
இப்பொது நடைபெற்று வரும் பாடலின் படப்பிடிப்பின் போது, அல்லு அர்ஜுன் முழு பெண் உடையில் கடினமான மற்றும் சவாலான நடன பயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடனம் பயற்சியிநபி போது, நடிகர் அல்லு அர்ஜுனுக்கு முதுகு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உக்கிரமாக உருவெடுத்த ரத்னம் விஷால்…மிரட்டலாக வெளியான வீடியோ.!
இதனால், புஷ்பா 2 -வின் இந்த முக்கிய பாடல் படப்பிடிப்பு டிசம்பர் 2வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதுகு வலி காரணமாக அல்லு அர்ஜுன் ஓய்வெடுக்க ஒரு சிறிய இடைவெளி எடுத்து வருகிறார். இதனால், அவரது போர்ஷன்கள் தொடங்க தாமதமாகும் என்று தெரிகிறது.
இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அல்லு அர்ஜுன் அடுத்ததாக பிரபல இயக்குனரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ஏற்கனவே, அல வைகுந்தபுரமுலோ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் மனுஷனே இல்லை! பரபரப்பை கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்!
இப்படத்தில் அல்லு அர்ஜுனை தவிர, பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பதாகையின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் யலமஞ்சிலி ரவிசங்கர் ஆகியோர் இப்படத்தை தயாரிக்க, படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…