சினிமா

கமல் முத்தத்திற்கு எல்லாரும் காத்திருக்காங்க! எனக்கு கிடைச்சது..நடிகை ரேகா உற்சாகம்!

Published by
பால முருகன்

நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அந்த சமயமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடிகை ரேகாவுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பார். அந்த காட்சியை படத்துடன் பார்க்கும்போது அந்த அளவுக்கு எமோஷனலாக இருக்கும்.

ஆனால், இந்த மாதிரி காட்சிகள் இருப்பது தனக்கு தெரியாது எனவும், திடீரென கமலே தனக்கு முத்தம் கொடுத்ததாக நடிகை ரேகாவே பல பேட்டிகளில் தெரிவித்து இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில்  கமல் முத்தத்திற்கு பலரும் காத்திருக்கிறார்கள். எனக்கு கிடைச்சும் நான் ஆதங்கத்துடன் பேசி வருகிறேன்” என்பது போல கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் என்னுடைய வயது மிகவும் சிறியது அந்த சமயம் எல்லாம் எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. அதாவது முத்த காட்சியில் இப்படி ரசித்து நடிக்கவேண்டும் என்று எல்லாம் தெரியாது.  புன்னகை மன்னன் படத்தில் முத்தக்காட்சியில் நடித்தவுடன் எனக்கு மிகவும் பயமாக இருந்தது.

மக்களை தொடாமல் வணக்கம் போட்ட கமல்! வீடியோவை கொண்டு வந்து விமர்சித்த ப்ளூ சட்டை!

அதற்கு காரணம் என்னுடைய அப்பா தான் என்னுடைய அப்பாவுக்கு நான் இந்த மாதிரி ஒரு காட்சியில் நடித்தேன் என்று தெரிந்தால் அவ்வளவு தான் என்று படக்குழுவிடம் கூறினேன் . பிறகு சென்சார் போது கட் செய்துவிடுவோம் என்று சொன்னார்கள். ஆனால், கட் செய்யவில்லை. கமல் சாருடைய முத்தம் வேண்டும் என்று நிறைய பேர் காத்திருக்கிறார்கள்.

ஆனால், எனக்கு அவருடைய முத்தம் கிடைச்சுட்டும் அதனால் ஆதங்க பட்டுவிட்டு அதனை பற்றிய ஒரு புகாராக பேசிக்கொண்டு அதைப்பற்றியே நேர்காணலில் பேசி வருகிறேன். இதனாலே  அவருடன் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு வராமலே போய்விட்டதாக நான் நினைக்கிறன். நான் கமல் சாரிடம் பட வாய்ப்புகளை கேட்டு இருக்கிறேன்.

குறிப்பாக பஞ்ச தந்திரம் போன்ற படங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, அவரிடம் சார் நீங்கள் இந்த மாதிரி ஒரு படம் செய்தால் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். அந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் நிச்சியமாக நடிப்பேன்” என சந்தோஷத்துடன் ரேகா பேசியுள்ளார். மேலும், ஒரு காலகட்டத்தில் ஹீரோயினாக கலக்கி வந்த ரேகா சமீபகாலமாக முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

35 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

56 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

1 hour ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

4 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago