VidaaMuyarchi [File Image]
நடிகர் அஜித் தற்போது “குட் பேட் அக்லி” மற்றும் “விடாமுயற்சி” ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் மகிழ் திருமேனியின் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் ஒன்னு கூட வெளியிடாமல் உள்ளது. ஆனால், ஒரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரனின் “குட் பேட் அக்லி” படத்தின் முதல் லுக் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு துபாயில் நடந்தது. படத்தின் டைட்டில் தொடர்ந்து இதுநாள் வரை படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை தவிர, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அஜித் தொடர்புடைய காட்சிகள் மட்டும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்து வந்தது.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாளை (ஜூன்30ம் தேதி) மாலை 7.03 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார். இது ஒருவேளை அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், உற்சாகம் அடைந்த அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அஜித்துடன் நடிகை த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ரெஜினா கசாண்ட்ராவும் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…