தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் அல்லு அர்ஜுன். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவர் இன்று தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.
மேலும் ட்வீட்டரில் இவரது ரசிகர்கள் #HBDALLUARJUN என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
படத்திலிருந்து வெளியான பாடல்களும் படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படம் 350 கோடிக்கும் மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ளதாம். இதனால் தற்போது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…