GOAT movie trailer Update [Image : actorvijay]
சென்னை : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் வரும் செப்டம்பர்- 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘தி கோட்’ படத்தின் ட்ரைலர் அப்டேட்டை தெறிக்கவிடும் போஸ்டருடன் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜயின் 68-வது படம் தான் ‘தி கோட்’, ஆரம்பத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன், விஜய் இணைந்து பணியாற்றுகிறார் என்ற செய்தி வெளியானது முதல் கிளம்பிய எதிர்பார்ப்பு தான் தற்போது வரையில் நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடி கொண்டே இருக்கிறது. அதற்கு தகுந்தது போல படக்குழுவும் ரசிகர்களை இடைவிடாது புது புது அப்டேட்களை கொடுத்து மகிழ்வித்து வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த கட்டமாக விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒன்று தான் ‘கோட்’ படத்தின் ட்ரைலர். இந்த படத்தின் ட்ரைலருக்கான அப்டேட் நேற்றைய நாள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், ட்ரைலரில் ஒரு சில எடிட்டிங் வேலை முடிவடையாமல் இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) ட்ரைலர் வெளியிடும் தேதியை அறிவிப்பதாக படக்குழு அறிவித்தது.
அதன்படி, இன்று மாலை இந்த ட்ரைலருக்கான அப்டேட்டை வரும் 17-ம் தேதி அதாவது வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என ‘போஸ்டருடன் ஒரு அறிவிப்பை’ படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும், அந்த போஸ்டரில் நடிகர் விஜயின் தெறிக்க விடும் மாஸான ஸ்டில் இணையத்தை கலக்கி வருகிறது. இந்த அப்டேட் வெளியானது முதல் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ட்ரைலருக்காக ஆவலாக காத்திருக்கின்றனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…