Categories: சினிமா

பருத்திவீரன் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட பிரபல இயக்குனர்! அமீர் சொன்ன தகவல்!

Published by
பால முருகன்

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரை பற்றி பேசியிருந்த காரணத்தால் பருத்திவீரன் படத்தின் விவகாரம்  பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் எப்போது முடிவுக்கு வரப்போகிறது என்று தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து சசிகுமார், பாரதி ராஜா, சமுத்திரக்கனி, சினேகன், ஆகியோர் ஞானவேல் ராஜா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

ஞானவேல் ராஜாவும் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு தெரிவிக்காமல் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். இதனால் வருத்தம் தெரிவிக்கிறது எல்லாம் பெரிய விஷயம் இல்லை சரியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறிவருகிறார்கள். இந்த விவகாரம் ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் படம் பற்றி யாருக்கும் தெரியாத தகவலும் பரவி கொண்டு வருகிறது.

குறிப்பாக பருத்திவீரன் படத்திற்காக சில பிரபலங்கள் சம்பளம் வாங்காத தகவல், அதைப்போல, படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கி அந்த சமயமே பாராட்டியுள்ள பிரபலங்கள் பற்றிய தகவலும் பரவி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், கண்கலங்க வைக்கும் படங்களை இயக்கி கொடுத்து வரும் இயக்குனர் பாலாவே பருத்திவீரன் படத்தை பார்த்து கண்கலங்கி அழுதாராம். இந்த தகவலை இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிகில் படத்தில் நடித்ததால் ரஜினி பட வாய்ப்பு மிஸ் ஆயிட்டு! நடிகை இந்துஜா வேதனை!

இது குறித்து பேசிய இயக்குனர் அமீர் “பாலா என்னுடைய மௌனம் பேசியதே படத்தை பார்த்திருக்கிறார். நானே படத்தை முடித்துவிட்ட அவரை அழைத்து படத்தை போட்டு காட்டினேன் . அவர் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாக கூறினார். அதைப்போல, பருத்திவீரன் படத்தையும் அவர் பார்த்தார்.

படத்தை பார்த்துவிட்டு எனக்கு முதலில் கால் செய்து எங்கு இருக்கிறாய்? உன்னை நான் பார்க்கவேண்டும் என்று சொன்னார். உடனடியாக நான் நீ இங்கு வரவேண்டாம் நானே அங்கு வருகிறேன் என்று கூறிவிட்டு நானே அவரை பார்க்க சென்றேன்.  இருவரும் சந்தித்து படம் பற்றி பல விஷயங்களை பேசினோம். அவர் ஒரு இரண்டு இடத்தை குறிப்பிட்டு அதனை பார்க்கும்போது கண்கலங்கி விட்டேன் என்று கூறினார்.  அந்த சந்திப்பிறகு நானும் பாலாவும் சந்திக்கவே இல்லை” எனவும் அமீர் தெரிவித்துள்ளார். மேலும், அமீர் பாலாவிடம் உதவி இயக்குனராகவும் நந்தா படத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…

13 minutes ago

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

10 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

10 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

11 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

11 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

14 hours ago