“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!
போலீசார் அடித்ததில் மரணமடைந்த அஜித்குமாரின் தாயார் மற்றும் தம்பியிடம் தொலைபேசி மூலம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறிப்பாக, திமுக அரசுக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
அப்பொழுது, அமைச்சர் பெரிய கருப்பனின் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரருடன் பேசிய முதல்வர், ”ரொம்ப ரொம்ப சாரிம்மா.., நடந்த கொடுமை யாருக்கும்
நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு. என்ன வேண்டுமோ அதை செய்து தருகிறேன், தைரியமா இருங்க.., எல்லாரையும் கைது செஞ்சாச்சு என்று பேசியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தனது ஆறுதலைத் தெரிவித்ததோடு, அரசு நிவாரணங்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். மேலும், அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு. கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!
கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்! pic.twitter.com/YhECfZx6v9
— M.K.Stalin (@mkstalin) July 1, 2025