சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்று காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின், சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் உறுதியளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் கடந்த ஜூன் 28ம் தேதி அன்று விசாரணைக்காக காவல் […]
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். இந்த விவகாரம் குறிப்பாக, திமுக அரசுக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அப்பொழுது, அமைச்சர் பெரிய கருப்பனின் […]
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித் குமார் உடற்கூராய்வு அறிக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில், உடற்கூராய்வு அறிக்கையை மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார் தாக்கல் செய்தார். இந்த வழக்கில், திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோயில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் ஆஜராகினர். இந்த […]
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின்போது அவரை போலீசார் கடுமையாக பிரம்பால் தாக்கியதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், சீருடை அணியாத காவலர்கள் அஜித் குமாரை கம்பத்தில் கட்டி, கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. […]