Rajinikanth and Anirudh [File Image]
சினிமா பிரபலங்கள் தங்களுடைய சிறிய வயதில் பெரிய பெரிய நடிகர்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமீபகாலமாக வைரலாகி கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இரண்டு பிரபலங்கள் தங்களுடைய சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தில் ரஜினிகாந்த் கட்டியணைத்து கொண்டு இருக்கும் அந்த குட்டிஸ்கள் வேறு யாரும் இல்லை ஒன்று தமிழ் சினிமாவில் தற்போது பல ஹிட் பாடல்களை கொடுத்து கலக்கி வரும் இசையமைப்பாளர் அனிருத் மற்றோன்று அனிருத்தின் சகோதரர் ஹிருஷிகேஷ் தான். இவர்கள் இருவருமே ரஜினியின் உறவினர்கள் தான். அடிக்கடி இவர்கள் தங்களுடைய குடும்பங்களுடன் பண்டிகை கொண்டாடும் புகைப்படங்களும் வெளியாகி நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா? அட இந்த நடிகரா இவர்!
எனவே, தங்களுடைய சிறிய வயதில் ரஜினிகாந்த் அவர்களுடைய வீட்டிற்கு சென்றபோது விளையாடி கொண்டிருந்த சமயத்தில் ரஜினியுடன் விளையாடி கொண்டு அவருடன் அனிருத், ஹிருஷிகேஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி கொண்டு வருகிறது. புகைப்படத்தில் அனிருத் மிகவும் அழகாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அட இந்த பிரபலன்களா? இது என ஆச்சரியத்துடன் கூறி வருகிறார்கள்.
சிறிய வயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகராக வளர்ந்து வந்த இசையமைப்பாளர் அனிருத், ரஜினி நடித்த பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய படங்களுக்கு இசையமைத்து மறக்க முடியாத பாடல்களையும், பின்னணி இசையும் கொடுத்துள்ளார். அதே சமயம் அனிருத்தின் சகோதரர் ஹிருஷிகேஷ் ரஜினியுடன் அண்ணாத்த, தனுஷுடன் வேலை இல்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…