RailinOligal [file image]
நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் இன்று (செப்டம்பர் 13) திருநெல்வேலியில் இருவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது, எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் ஆகியோர் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘புளூ ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் பிருத்வி பாண்டியராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், படத்தின் முன்னணி ஜோடிகளின் திருமண நாளை முன்னிட்டு, அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்து, படத்தின் முதல் பாடலான ‘ரயிலின் ஒலிகள்’ என்ற காதல் பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்க, ரெயிலின் ஒலிகளை பிரதீப் குமார் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளனர். பாடல் வரிகளை உமா தேவி எழுதியுள்ளார். இந்த பாடல் வீடியோ அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் கதாபாத்திரங்களையும் இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் கதையை காட்சியாக காட்டப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…