bayilvan ranganathan [FILE IMAGE]
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை காஞ்சனா. இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு விமானத்தில் பணிபுரிந்து வந்தவர். பிறகு அந்த சமயமே பார்ப்பதற்கு அழகாக இருந்த இவருக்கு சினிமாவில் நடிக்க ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு காஞ்சனாவின் சினிமா வாழ்க்கையே மாறிவிட்டது என்றே கூறலாம்.
ஏனென்றால், இந்த திரைப்படத்திற்கு பிறகு மோட்டார் சுந்தரம் பிள்ளை, கொடிமலர், பாமா விஜயம், பொன்னு மாப்பிள்ளை, சிவந்த மண், விளையாட்டுப் பிள்ளை, அவளுகென்று ஓர் மனம், நியாயம் கேட்கிறோம், நினைவில் ஒரு மலர் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.கருப்பு- வெள்ளை படங்களை தொடர்ந்து கலர் படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருந்தார்.
திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்…திரெளபதி நடிகை ஷீலா அறிவிப்பு.!
1970, 80 காலகட்டத்தில் எல்லாம் இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து கொண்டு இருந்தார். இதன் காரணமாக இவருக்கு அந்த சமயம் கலர் பட கஞ்சனா என்ற பெயரும் வந்தது. பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தவுடன் என்ன ஆனார் என்றே தெரியாமல் சினிமாவை விட்டே சற்று விலகிவிட்டார்.
இந்நிலையில், காஞ்சனா என்ன ஆனார் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்ற தகவலை நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” கலர் பட காஞ்சனா அந்த சமயத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். கோடி கணக்கில் இவருக்கு சொத்து இருந்தது.
அந்த சொத்துக்கள் அனைத்தையும் அவருடைய சொந்த காரர்கள் ஏமாற்றி வாங்கிவிட்டார்கள். பிறகு பணத்தை இழந்த காஞ்சனா கோவில்களில் சமூக சேவை செய்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தினார். திருமணம் செய்து கொண்ட போதிலும் அவருக்கு பெரிதாக திருமண வாழ்கை கைகொடுக்கவில்லை. இப்போது தன்னிடம் இருக்கும் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்து விட்டு திருப்பதியில் பெண் சாமியாராக வாழ்கிறார்” எனவும் நடிகை காஞ்சனா குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…