BiggBossTamil7 [file image]
விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ 6 சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், 7வது நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளதாகவும், இந்த சீசனில் இரண்டு வீடுகள் மற்றும் 2 கமல் இருப்பதாகவும் ஏற்கனவே ப்ரோமோ வீடியோவில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சீசனில் மற்றொரு அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினாலும், பிக் பாஸ் வீட்டிற்குள் பேசும் குரலானது கமல் கொடுக்கமாட்டார். அது வேற ஒரு நபரை வைத்து தான் பேசவைக்கப்படும், இது முந்தைய சீசன்களைப் போலல்லாமல் இரு வீடுகளிலும் இரண்டு வெவ்வேறு நபரைகளை வைத்து ‘பிக் பாஸ்’ குரல்கள் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக பிக் பாஸ் வீட்டிற்குள் கொடுக்கும் சதிஷ் சாரதி சாஷோவின் குரல் ஒரு வீட்டிலும், இரண்டாவது வீட்டில் கேட்கும் குரலானது அது ஒரு பெண்ணின் குரலாக இருக்க கூடும் கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் கலைஞர் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை, அது மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ‘பிக் பாஸ் தமிழ் 7’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யாரெல்லாம் என்ற ஒரு தகவலின்படி, ஜாக்குலின், ரேகா நாயர், பயில்வான் ரங்கநாதன், தினேஷ் கோபால்சாமி, பிருத்விராஜ், பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, செய்தி தொகுப்பாளர் ரஞ்சித் மற்றும் மேலும் சிலரிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளதாகவும், விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. இவர்கள் மட்டும் இல்லாமல், முந்தைய சீசன் போட்டியாளர்களான மகபா ஆனந்த் மற்றும் ஓவியாவும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…