சினிமா

கல்யாணம் பண்ணாமலே ஜாலியா இருக்கலாம்? ராய் லட்சுமியின் ரகசியத்தை உடைத்த பயில்வான்!

Published by
பால முருகன்

காஞ்சனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், காஞ்சனா படத்திற்கு கிடைத்த வரவேற்பு இவருக்கு எந்த படத்திலும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிற்கு சென்றுவிட்டார்.

தமிழ் சினிமாவிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது போல ஹிந்தி, தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் திரைப்படங்களில் கவர்ச்சி நடனமும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்.

இந்த நிலையில், 34 வயதாகும் நடிகை  ராய் லட்சுமி இன்னும் என்ன காரணத்துக்காக திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்பதற்கான தகவலை பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி, பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தான் 34 வயதிலும் இளமையாக இருக்கிறேன் என்பதை காமிப்பதற்காக தான் புகைப்படங்களை வெளியிடுவதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” நடிகை ராய் லட்சுமி  என்றாலே கவர்ச்சி வெடிகுண்டு தான். முதல் படத்திலேயே அவர் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த அளவிற்கு அவர் ஒரு கவர்ச்சி வெடிகுண்டு. காஞ்சனா படத்தில் பார்த்தீர்கள் என்றால் கவர்ச்சியும் ராகவலாரன்ஸ் உடன் அவருடைய கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும். பிறகு பட வாய்ப்புகள் இல்லாததால் சமீபகாலமாக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

இப்படியான கவர்ச்சியான புகைப்படங்களை அவர் வெளியிடுவதன் காரணமே தான் இன்னும் இளமையாக இருப்பதை காமிக்க தான். ராய் லட்சுமி  இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க காரணம் அவருக்கு அதில் விருப்பம் இல்லை. கல்யாணம் பண்ணிட்டு தான் ஜாலியாக இருக்கணுமா? கல்யாணம் பண்ணாமலே ஜாலியாக இருக்கலாம் என்பதை மெய்ப்பித்து கொண்டு இருக்கிறார்” எனவும்  பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மேலும், நடிகை ராய் லட்சுமி கடைசியாக தி லெஜண்ட் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலில் கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது போலா எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாளத்தில் ‘டிஎன்ஏ’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

9 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

10 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

11 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

11 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago