Captain Miller [FIle Image]
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் பீரியட் ஆக்ஷன் படமான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் மிகப்பெரிய ஹைப்பைக் கொண்டுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். டி ராமலிங்கம் கலை இயக்கம் மற்றும் திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளனர். ம
சமீபத்தில், இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது, அந்த அளவிற்கு படத்தின் போர் காட்சிகள் ஆகட்டும், தனுஷின் துப்பாக்கி சூடும் காட்சிகள் ஆகட்டும் அனைத்தும் ரசிகர்களை பிரமிக்க வைத்தது.
இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் குறித்து அப்டேட்டை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இது குறித்து தனது X தள பக்கத்தில், “நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மழ குவியும்” என்று வாசகத்துடன் படத்தின் ஆல்பம் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில், ஷிவ் ராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ் மற்றும் ஆர்ஆர்ஆர் புகழ் எட்வர்ட் சோனென்ப்ளிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் டிசம்பர் 15 ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…
சென்னை : மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…
சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…
லண்டன் : இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…