sivaji ganesan and actor Chandrababu [File Image]
கமர்ஷியல் கதைக்கு எமோஷலாக நடிக்கவேண்டும் என்றால் சிவாஜி கணேஷினின் படங்களை பார்க்கலாம். அதைப்போல காமெடியாக நடிக்கவேண்டும் என்றால் சந்திரபாபு நடித்த படங்களை பார்க்கலாம். அந்த அளவிற்கு இருவருமே இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாக இருக்கிறார்கள். ஒரு சமயம் சிவாஜி ஒரு பக்கம் ஹீரோவாக நடித்து வந்துகொண்டிருந்த சமயத்தில் சந்திரபாபு தொடர்ச்சியாக காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இவருவரில் யார் சிறந்த நடிகர் என்று சொல்ல முடியாத அளவிற்கு இரண்டு பேரும் அருமையான நடிகர்கள். இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள். அப்படி ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும்போது அந்த படத்தில் சிவாஜியை விட சம்பளம் அதிகமாக வாங்கியது மட்டுமின்றி நடிப்பில் சிவாஜியையே ஓரம் கட்டியுள்ளார்.
அது என்ன திரைப்படம் என்றால் இயக்குனர் பிஆர் பந்துலு இயக்கத்தில் 1958 ஆம் ஆண்டு வெளியான “சபாஷ் மீனா” திரைப்படம் தான். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் 2 வேடங்களில் சந்திரபாபு நடித்திருப்பார். இதில் அவர் நடித்த ரிக்ச்சா காரர் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி அடைந்தது.
இந்த படத்தில் சிவாஜி கணேசனை நடிப்பில் நடிகர் சந்திரபாபு ஓரம் கட்டியிருப்பாராம். இதனை பலமுறை சிவாஜி கணேசன் தனது நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறாராம். அது மட்டுமின்றி, இந்த படத்தில் நடிக்க சந்திரபாபு சிவாஜியை விட அதிகமாக வாங்கினாராம். சிவாஜியை விட 1 ரூபாய் அதிகமாக சம்பளம் வாங்கினாராம். இந்த தகவலை மருத்துவரும் சினிமா ஆய்வாளருமான கந்தராஜ் தெரிவித்துள்ளார்.
1958 ஆம் ஆண்டு வெளியான “சபாஷ் மீனா” திரைப்படத்தில் சிவாஜிகணேசன் மற்றும் சந்திரபாபுவுடன் பி.ஆர்.பந்துலு, டி.பாலசுப்ரமணியம், நடராஜன், மாலினி, பி.சரோஜாதேவி, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…
சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…