பிகில் இசை வெளியீட்டு விழாவில் தளபதி சொன்ன குட்டி கதை! ரசிகர்களின் அதிரடியான பதில்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், ஒரு குட்டி கதை சொன்னார். அந்த கதையை அவர் காப்பி அடித்து சொன்னதாக பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விஜய் ரசிகர் ஒருவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தளபதி குட்டிக்கதை சொல்லும் போது நா படிச்சது,கேட்டதுன்னு தான் சொல்லுவாரு! நா எழுதுனதுன்னு லாம் சொல்ல மாட்டாரு!’ என பதிவிட்டுள்ளார்.
தளபதி #குட்டிகதை சொல்லும் போது நா படிச்சது,கேட்டதுன்னு தான் சொல்லுவாரு!
நா எழுதுனதுன்னு லாம் சொல்ல மாட்டாரு! #BigilAudioLaunch pic.twitter.com/n9TU8iOsuy— Sañthøsh Vj (@santhosh2vj) September 25, 2019