வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல நகைசுவை நடிகர்!

தாணு தயாரிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படம் வெக்கை நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் அசுரன் படத்தை தொடர்ந்து, அடுத்த புதிய படத்திற்காக தயாராகி வருகிறார். இப்படத்தில் நாயகனாக பிரபல நகைசுவை நடிகர் சூரி ஒப்பந்தமாகியுள்ளாராம். நடிகர் சூரி, இப்படத்தில்நடிப்பதன் மூலம் அவரது திரையுலக பயணத்தில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025