vadivelu singing [Image source : file image ]
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, மாமன்னன் படத்தின் முதல் பாடல் வரும் மே 19-ஆம் தேதி வெளியாகும் என படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற சோனி மியூசிக் சவுத் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பாடலை வடிவேலு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஏ.ஆர்.ரஹ்மான் வடிவேலுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு ” வைகைப் புயல் வடிவேலுவுடன் ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளோம்” என பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…