ஷங்கரின் இளைய மகள் அதிதிக்கு திருமணம்.? உண்மை தகவல் இதோ.!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது ராம்சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்று இரு மகள்களும் ஆர்ஜித் என்ற மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு ரோஹித் தாமோதரன் என்பவருடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி , கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் திருமணம் நடந்தது.

அப்போது, கொரோனா சூழலால் நெருங்கிய குடும்ப நண்பர்களை மட்டும் அழைத்து இவர்களது திருமணம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆகியோர் இவர்களது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்த நிலையில். கொரோனா பரவல் குறைந்த பிறகு, திரையுலகில் உள்ள அனைவரையும் அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் ஷங்கர் திட்டமிட்டிருந்தார். அதன்படி, இயக்குநர் இப்போது வரவேற்புக்கான தேதியை குறித்து பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

இதில், முதல் பத்திரிகையை தன் முதல் படத் தயாரிப்பாளரான ‘ஜென்டில்மேன்’ படத்தை தயாரித்த கே.டி.குஞ்சுமோனுக்கு வழங்கியுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஷங்கரின் இளையமகள்மற்றும் விருமன் படத்தின் கதாநாயகியான அதிதி ஷங்கருக்கு தான் திருமணம் என செய்திகளை பரப்பிவிட்டனர்.

ஆனால், அது வதந்தி என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷங்கர் முதல் மகள் ஐஸ்வர்யாவின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தான் பத்திரிக்கை வைக்கச்சென்றுள்ளார். ஐஸ்வர்யா ஷங்கரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகின்ற மே மாதம் 1-ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா மண்டபத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

12 hours ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

13 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

14 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

14 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

15 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

16 hours ago